Sunday 28 January 2018

Julia X 3-D (2011) Review :

பெண்களை கவர்ந்து அழைத்துவந்து விதவிதமாக சித்ரவதை செய்து அதைப்பார்த்து ரசித்து இறுதியில் அவர்களை கொன்று மகிழும் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் படத்தின் நாயகி சிக்கிக்கொள்கிறாள். 
பிறகு சித்ரவதைப்படலம் ஆரம்பமாகிறது...
இக்காட்சிகளில் இவர்களது நடிப்பு இது நடிப்பல்ல நிஜம் எனும் அளவுக்கு அமைந்திருப்பது சிறப்பு.
ஒருகட்டத்தில் நாயகி அவனிடமிருந்து தப்புகிறாள்.
இவன் அடுத்தபெண்ணை தேடி கிளம்புகிறான்...
தன்னை இவ்வளவு கொடூரமாக சித்திரவதைகள் செய்தவனை மன்னிக்க நாயகி தயாராக இல்லை.
ஒருகட்டத்தில் இவன் நாயகியிடம் சிக்கிக்கொள்கிறான்.
இவனை அவள் பதிலுக்கு பழிவாங்கப்போகிறாள் என நினைக்கும்போது ஒரு டுவிஸ்ட். 
நிஜத்தில் நாயகியும் அவளது தங்கையும் இவனைவிடவும் பலமடங்கு கொடூரமான சைக்கோக்கள் !
இப்போது நாயகியின்முறை...
இவனை அவர்கள் இருவரும் வதைக்கத்தொடங்குகிறார்கள். 
( நாயகியின் தங்கைபாத்திரம் சற்றே லூசுபோல காமெடியாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அது ஏனென்பது கிளைமாஸ்க் காட்சின்போது தான் புரியும். )
இவர்களது சித்ரவதைக்காட்சிகள் சிலிர்க்கும்படி படமாக்கப்பட்டிருக்கிறது. 
திடீரென நாயகிக்கும் அவளது தங்கைக்குமே பிணக்கு ஏற்படுகிறது...
இப்போது இந்த மூன்று சைக்கோக்களின் உச்சகட்ட மோதல் போராட்டம் ஆரம்பமாகிறது... 
இதில் இவர்களில் யார் உயிரோடு தப்பிக்கிறார்கள் என்பது உச்சகட்டக்காட்சி. 
படிப்பதற்கு சாதாரன சைக்கோ கதைபோல தோன்றினாலும் படமாக்கப்பட்ட விதத்தில் இருக்கிறது இப்படத்தின் சிறப்பு.
ஒரு திரில்லர் ஹாரர் படத்திற்கு தேவையான திகிலூட்டும் இசையை வழங்கியிருக்கிறார் Akira Yamaoka 
ஒளிப்பதிவாளர் Jason Goodman காட்சிகளை படமாகியுள்ள விதம் பிரம்மிப்பு. 
அதிலும் 3
D காட்சிகளை மிரட்டலாக படமாக்கியிருப்பது மிகச்சிறப்பு.
மேக்கப்மேனின் பங்களிப்பு அட்டகாசம்.
RobNeal எடிட்டிங் கச்சிதமாக படத்தை செதுக்கியிருக்கிறது. 
இயக்கம் PJPettiette படத்தில் பணியாற்றியுள்ள அத்தனைபேரிடமிருந்தும் அவர்களின் பெஸ்ட்டை வாங்கியிருக்கிறார். 
இப்படம் 2Dயில் பார்த்தால் நன்றாக இருக்கும்.
3Dயில் பார்த்தால் மிகநன்றாக இருக்கும். 
திரில்லர் & ஹாரர் விரும்பிகள் அவசியம் பார்க்கவேண்டிய படம் Julia X 3D .

3 comments:

M.K. தியாகராஜ பாகவதரின் பிறந்தநாள்

தமிழ்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்த  M.K. தியாகராஜ பாகவதரின் 107வது பிறந்தநாள் இன்று. ( 1.03.2018) 29 வயதில் சினிமாவில...