Wednesday 28 February 2018

M.K. தியாகராஜ பாகவதரின் பிறந்தநாள்

தமிழ்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்த 
M.K. தியாகராஜ பாகவதரின் 107வது
பிறந்தநாள் இன்று. ( 1.03.2018)
29 வயதில் சினிமாவில் உச்சம்தொட்டு 
49 வயதிலேயே மரணமடைத்தவர்.  
புகழின் உச்சத்தில் இருக்கும் போது எப்படி இருக்கக்கூடாது 
என்பதற்கு இவரது வாழ்வு எடுத்துக்காட்டு...
110பவுன்தங்கத்தாலான தட்டில் சாப்பிட்ட இவர் 
லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் சிக்கி சிறைசென்று 
இரண்டரையாண்டுகளுக்கு பிறகு விடுதலையாகி 
வெளிவந்தபோது திரையுலகில் இவருடைய இடம் பறிபோயிருந்தது. 
தங்கத்தட்டில் உணவருத்தியவர் இறுதிக்காலத்தில் 
மூன்றுவேளை  உணவுக்கு எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தார் 
என்பதே இவரது வாழ்க்கை 
பணம் மற்றும் புகழின் போதையில் ஆடுவோருக்கு சொல்லும் பாடம்...

Sunday 18 February 2018

Gallows Hill 3-D { the DAMNED } (2013 ) Review:

ஆறேழு பேர் கொண்ட குடும்பம் காரில் பயணிக்கிறார்கள். 
அப்போது திடீரென பெய்யும் பெருமழையில் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்குகிறது. 
விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் அந்த இரவில் அருகிலுள்ள ஒரு வீட்டில் தங்க நேரிடுகிறது... 
பாத்ரூமில் குளித்துக்கொண்டிருக்கையில் கீழிருந்து ஒருகுழந்தையின் அழுகுரலும் விசும்பலும் கேட்கத்தொடங்குகிறது. 
அங்குள்ள பெரியவரிடம் கேட்கையில் உரியமுறையில் பதிலில்லை.
அந்த வீட்டின் அண்டர்கிரவுண்டிலுள்ள ஒரு குழந்தையை காப்பாற்றி வெளிக்கொண்டுவருகிறார்கள். 
அதன்பிறகு அமானுஷ்யமான பல சம்பவங்கள் அரங்கேறுகின்றன...
இவர்களில் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள்.
கொல்லப்பட்டவர்கள் பேயாக மாறி மற்றவர்களையும் கொல்லத்தொடங்க... இவர்களில் யார் எப்படி உயிரோடு தப்பி அந்த வீட்டிலிருந்து வெளிவருகிறார்கள் என்பதே கதை.
ஒரு சாதரண கதையை தேர்ந்தெடுத்து அதை படமாக்கிய விதத்தில் வித்தியாசப்படுத்தியிருக்கிறார்கள். 
குறிப்பாக அந்த வீட்டினை காட்சிப்படுத்தியுள்ள விதம்...
கலை இயக்குநரின் நேர்த்தி அருமை.
படம் தொடங்கி சிறிது நேரத்தில் பெய்யத்தொடங்கும் மழை இறுதிவரை பெய்வது... 
வீட்டிற்குள் இருந்தாலும் சத்தத்திலேயே மழை தொடர்ந்து பெய்துகொண்டிருப்பதை இசையால் உணர்த்தி அதை படத்தின் விறுவிறுப்புக்கு பயன்படுத்தியுள்ள 
விதம் அருமை.
நடித்துள்ள ஒவ்வொருவருமே பாத்திரத்தின் தன்மை உணர்ந்து செய்திருப்பது சிறப்பு.
குறிப்பாக நாயகியாக நடித்துள்ள ஷோபியா மைல்ஸ் பயப்படும் காட்சிகளில் தனது முகபாவனைகளால் கவர்கிறார்.
இயக்குநர் விக்டர் கார்சியா ( Return to House on Haunted Hill 2007 & Mirrors 2 2010 ) முந்தைய படங்களைவிடவும் இப்படத்தை கூடுதல் கவனத்துடன் இயக்கியுள்ளது தெரிகிறது.
எழுதி இசையமைத்துள்ளவர் Richard D'Ovidio 
ஒளிப்பதிவாளர் Alejandro Moreno  வின் பங்களிப்பு அருமை. 
அதிலும் 3D காட்சிகளை படமாக்கியுள்ள விதம் அபாரம். 
மொத்தத்தில் 2D யில் பார்ப்போருக்கு ஒரு முறை பார்த்து ரசிக்கும் விதத்திலும்...
3D பார்ப்போருக்கு பிடித்தமானதாகவும் இருக்கிறது இப்படம்.

M.K. தியாகராஜ பாகவதரின் பிறந்தநாள்

தமிழ்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்த  M.K. தியாகராஜ பாகவதரின் 107வது பிறந்தநாள் இன்று. ( 1.03.2018) 29 வயதில் சினிமாவில...